/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பண்ணாரி கோவில் உண்டியல் 'கவுன்டிங்'
/
பண்ணாரி கோவில் உண்டியல் 'கவுன்டிங்'
ADDED : ஆக 02, 2024 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம், சத்தியமங்கலத்தை அடுத்த பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில், பக்தர்கள் காணிக்கை செலுத்தும் உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.
கோவில் துணை ஆணையர் மேனகா தலைமை வகித்தார். இதில், 83.86 லட்சம் ரூபாய், 336 கிராம் தங்கம், 945 கிராம் வெள்ளி கிடைத்தது. காணிக்கை எண்ணும் பணியில் வங்கி பணியாளர், கோவில் ஊழியர், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.