ADDED : ஆக 05, 2024 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்,
திங்களூர், கேர்மாளம், ஆசனுார் ஊராட்சிகளில் தொடர் மின்வெட்டை கண்டித்தும், தீர்வு காண வலியுறுத்தியும், இ.கம்யூ., கட்சி சார்பில், ஆக.,5ம் தேதி கேர்மாளம் செக்போஸ்ட்டில் சாலை மறியலில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சத்தி டி.எஸ்.பி., சரவணன் தலைமையில் டி.எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. இதில் உடனடியாக சுஜில்கரையில் மின்மாற்றியை பொருத்தப்படும். மற்ற பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனால் மறியல் போராட்டத்தை விலக்கி கொள்வதாக கம்யூ., கட்சியினர் அறிவித்தனர். பேச்சுவார்த்தையில் முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தரம், இ.கம்யூ., தாளவாடி கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்சாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.