/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாலை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
/
சாலை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 11, 2024 06:08 AM
ஈரோடு: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில், ஈரோடு, நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைப்பதன் மூலம், 3,500க்கும் மேற்பட்ட சாலை பணியாளர், சாலை ஆய்வாளர் பணியிடம் ஒழிக்கப்படும். சுங்கச்சாவடி அமைத்து சுங்க வரியை தனியார் வசூலிக்க அனுமதிக்கக்கூடாது. நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும். சீரமைப்பு என்ற பெயரில் நிரந்தர பணியிடங்களை ஒழிக்கக்கூடாது.
தொழில் நுட்ப கல்வித்திறன் பெறாத சாலை பணியாளர்களுக்கு, ஊதிய மாற்றம், 5,200 ரூபாய் - 20,000 ரூபாயில் தர ஊதியம், 1,900 ரூபாய் வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். கோட்ட தலைவர் செங்கோட்டையன் தலைமையில் பல்வேறு சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.