/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஓட்டு எண்ணும் மையத்தில் பணி சட்டசபை தொகுதிக்கு 100 பேர் நியமிக்க ஏற்பாடு
/
ஓட்டு எண்ணும் மையத்தில் பணி சட்டசபை தொகுதிக்கு 100 பேர் நியமிக்க ஏற்பாடு
ஓட்டு எண்ணும் மையத்தில் பணி சட்டசபை தொகுதிக்கு 100 பேர் நியமிக்க ஏற்பாடு
ஓட்டு எண்ணும் மையத்தில் பணி சட்டசபை தொகுதிக்கு 100 பேர் நியமிக்க ஏற்பாடு
ADDED : ஏப் 28, 2024 04:24 AM
ஈரோடு: ஈரோடு லோக்சபா தொகுதியில் பதிவான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் (இ.வி.எம்.,), கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வி.வி.பேட் ஆகியவை, சித்தோடு அரசு பொறியியல் கல்லுாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன், 4ல் ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது. இதற்கான முன்னேற்பாட்டு பணி நடந்து வருகிறது.
இதுபற்றி தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது: ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் தலா, 14 டேபிள்களில் ஓட்டு எண்ணப்படும். ஒரு டேபிளில் 4 பேர் பணியில் ஈடுபடுவர். தவிர ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கான இ.வி.எம்.,கள் பாதுகாப்பு அறையில் இருந்து வரிசைப்படி, சரி பார்த்து அனுப்ப ஒரு மண்டல உதவி அதிகாரி, ஒரு அலுவலக உதவியாளர் குறைந்த பட்சம், 20 பேர் இருப்பார்கள்.
தவிர ஒரு தொகுதிக்கு ஒரு டைப் செய்பவர், ஒரு கம்ப்யூட்டர் பதிவாளர், 2 அலுவலக உதவியாளர்கள், போர்டில் எழுதுபவர், மைக்கில் அறிவிப்பாளர், பிரிண்டர்களில் நகல் எடுப்பவர்கள் தனியாக பணி செய்வார்கள். இப்பணிகளில் ஈடுபடும் அனைத்து நிலையிலும், 20 சதவீதம் கூடுதல் அலுவலர், பணியாளர் உடனிருப்பார்கள்.
தவிர கலெக்டர், தேர்தல் பொது பார்வையாளர்கள், டி.ஆர்.ஓ., - ஆர்.டி.ஓ., நிலை அதிகாரிகள் பொதுவான பணியில் ஈடுபடுவர். ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் ஒரு தாசில்தார் நிலையில் ஏ.ஆர்.ஓ.,க்கள், அவர்களுடன் உதவியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர்.
இவ்வாறாக ஒரு சட்டசபை தொகுதிக்கு தலா, 80 முதல், 100 பேர் வரை ஈடுபடுவார்கள். இதற்காக வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, கல்வித்துறை, மத்திய அரசு பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள், உதவியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். இப்பணிகள் அடுத்த ஒரு வாரத்தில் நிறைவு செய்து, தேர்தல் ஆணைய ஒப்புதல் பெறப்படும். இவ்வாறு தெரிவித்தனர்.

