/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அணை நீர்த்தேக்க பகுதியில் பகிரங்க தண்ணீர் திருட்டு: மின் மோட்டார் இணைப்பு துண்டிப்பு

ADDED : ஏப் 28, 2024 03:57 AM
பவானிசாகர்: அணை நீர்த்தேக்க பகுதியில் தண்ணீர் திருடிய மோட்டார் மின் இணைப்புகளை அதிகாரிகள் துண்டித்தனர்.
பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியை ஒட்டி, ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் சாகுபடி செய்ய, அனுமதி பெறாமல், மின் மோட்டார் அமைத்து, அணையில் இருந்து தண்ணீர் எடுத்து வருகின்றனர். குறிப்பாக சித்தன்குட்டை, பூதிக்குப்பை, சுஜ்ஜில்கு பகுதிகளில், நீர்வழி பாதையின் ஓரம் நுாற்றுக்கும் மேற்பட்ட ராட்சத மோட்டார் பொருத்தி ராட்சத குழாய்கள் மூலம்  தண்ணீர் திருட்டு பகிரங்கமாக நடக்கிறது.
நீர்வளத்துறை அதிகாரிகள், அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து, மோட்டார்களை பறிமுதல் செய்தாலும், தண்ணீர் திருட்டை முழுமையாக தடுக்க முடிவதில்லை.
இந்நிலையில் பவானிசாகர் அணை கோட்டப்பிரிவு உதவி செயற்பொறியாளர் பொங்கியண்ணன் தலைமையில் நீர்வளத்துறை ஊழியர்கள், சித்தன்குட்டை பகுதியில் நேற்று ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது சட்டவிரோத மின் மோட்டார் மின் இணைப்புகளை துண்டித்து, பம்ப்செட்டுகளை அகற்றினர்.
தகவலறிந்து திரண்ட விவசாயிகள் அதிகாரிகளிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு சில விவசாயிகள் பம்ப்செட்களை அவர்களாகவே அகற்றிக் கொண்டனர். இனி அணையில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சினால், குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென  நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.