ADDED : செப் 15, 2024 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலாண்டு தேர்வு 19ல் துவக்கம்
ஈரோடு, செப். 15-
ஈரோடு மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலாண்டு தேர்வு வரும், 19ம் தேதி தொடங்கவுள்ளது. ஆறாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை, 20ம் தேதி தொடங்குகிறது. பிளஸ் 1, பிளஸ் 2க்கு, 19ம் தேதி ஆரம்பமாகிறது. ஆறு, எட்டு, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு காலையில், ௭, ௯, பிளஸ்௧க்கு மதியமும் தேர்வு நடக்கிறது. அனைத்து வகுப்புகளுக்கும், 27ல் நிறைவடைகிறது. 28ம் தேதி முதல் அக்., 2 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.