/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தடைபட்ட வளர்ச்சி திட்டப்பணி மாவட்டத்தில் மீண்டும் துவக்கம்
/
தடைபட்ட வளர்ச்சி திட்டப்பணி மாவட்டத்தில் மீண்டும் துவக்கம்
தடைபட்ட வளர்ச்சி திட்டப்பணி மாவட்டத்தில் மீண்டும் துவக்கம்
தடைபட்ட வளர்ச்சி திட்டப்பணி மாவட்டத்தில் மீண்டும் துவக்கம்
ADDED : ஏப் 28, 2024 04:21 AM
ஈரோடு: தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்காக தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது. இதனால், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், துவங்குதல், விரிவாக்கம் செய்தல் போன்றவை தடைபட்டுள்ளது. ஜூன், 4ல் ஓட்டு எண்ணிக்கை முடிந்து, தேர்தல் நடத்தை விதி விலகிய பிறகே புதிய திட்டப்பணிகள் துவங்கும்.
இதுபற்றி ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் கூறியதாவது: தேர்தலால் தடைபட்டிருந்த வளர்ச்சி பணிகள் மீண்டும் விரைவுபடுத்த யோசனை தெரிவித்து, விரைவுபடுத்துகிறோம். தேர்தலுக்காக அமைக்கப்பட்ட பறக்கும் படை உள்ளிட்ட குழுக்கள் கலைக்கப்பட்டு, பணம் பறிமுதல் செய்தல் உட்பட பல்வேறு விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர்களும் பணிக்கு திரும்பியுள்ளனர்.
தற்போது கடும் கோடையாக இருந்தாலும், அவசியம் கருதி துார்வாருதல், சாலை அமைத்தல், நீர் நிலை சீரமைத்தல் உட்பட பல பணிகள் துவங்கி நடந்து வருகிறது.
இவற்றை விரைவுபடுத்தவும், வரும் டிச., மாதம் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், அங்கு என்னென்ன பணிகள் செய்யலாம் என்பதை பட்டியலிட்டு வருகிறோம். இவ்வாறு கூறினர்.

