/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அ.தி.மு.க., பணிமனை பூஜையில் வாகனங்களில் கட்சி கொடி அகற்றம்
/
அ.தி.மு.க., பணிமனை பூஜையில் வாகனங்களில் கட்சி கொடி அகற்றம்
அ.தி.மு.க., பணிமனை பூஜையில் வாகனங்களில் கட்சி கொடி அகற்றம்
அ.தி.மு.க., பணிமனை பூஜையில் வாகனங்களில் கட்சி கொடி அகற்றம்
ADDED : மார் 25, 2024 01:15 AM
ஈரோடு:ஈரோடு லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளருக்கான, தேர்தல் பணிமனை அமைப்பதற்கான பூஜை, ஈரோடு, அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே நடந்தது.
மாநகர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் ராமலிங்கம் தலைமை வகித்தார். வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் தென்னரசு, சிவசுப்பிரமணியன், பகுதி செயலாளர்கள் கே.சி.பழனிசாமி, ஜெகதீசன், கேசவமூர்த்தி, முருகசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.
அவ்விடத்தில் பூஜைக்கு மட்டும் அனுமதி பெற்றுள்ளதாகவும், கூட்டம் நடத்த, செய்தியாளர் சந்திப்பு, 100 பேருக்கு மேல் கூட அனுமதி இல்லை என்றும், சில வாகனங்களில் கட்சி கொடிகள் கட்டியதை அகற்ற வேண்டும் எனக்கூறி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வலியுறுத்தினர். சில வாகனங்களில் கொடிகள் அகற்றப்பட்டன.