ADDED : செப் 03, 2024 04:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தாராபுரம்,
அலங்கியம் ரோட்டை சேர்ந்தவர் மகேஸ்வரன், 37; பைக்கில் சென்றவரை இருவர்
வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, 150 ரூபாயை பறித்துள்ளனர்.
மகேஸ்வரன் புகாரின்படி விசாரித்த தாராபுரம் போலீசார், உடுமலையை
சேர்ந்த சபரீஸ்வரன், 26; கோவை, கவுண்டம்பாளையத்தை சேர்ந்த கார்த்தி,
24, ஆகியோரை கைது செய்தனர்.
தெ.கருப்பட்டி ஏலம்கோபி, செப். 3-
ஈரோடு
மாவட்டம் சிறுவலுார் அருகே பதிப்பாளையம் கருப்பட்டி உற்பத்தியாளர்
சங்கத்தில், கருப்பட்டி ஏலம் நேற்று நடந்தது. பனங்கருப்பட்டி சீசன்
நிறைவால் ஏழாவது வாரமாக வரத்தாகவில்லை. தென்னங்கருப்பட்டி, 650
கிலோ வரத்தாகி, ஒரு கிலோ, 150 ரூபாய்க்கு விற்பனையானது. அனைத்து
தென்னங்கருப்பட்டியும், 97 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது.