ADDED : ஆக 18, 2024 02:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் காமராஜ் வீதியில் மாநகராட்சி துவக்க பள்ளி செயல்படுகிறது. பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நேற்று நடந்தது. தலைமை ஆசிரியை மோகனாம்பாள் தலைமை வகித்தார்.
ஆசிரியர் தனமேரி, 36வது வார்டு கவுன்சிலர் செந்தில் குமார், ஒளிரும் சிறகுகள் அமைப்பு தலைவர் சீனிவாசன், முன்னாள் மாணவர் கணேஷ், இல்லம் தேடி கல்வி உறுப்பினர்கள், பெற்றோர், முன்னாள் மாணவர்கள் இதில் பங்கேற்றனர். கூட்டத்தில் தலைவராக கீதா தேவி, துணை தலைவராக நந்தினி உள்ளிட்ட, 24 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

