/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'ஓடையில் மண் அள்ள அனுமதிக்கக் கூடாது'
/
'ஓடையில் மண் அள்ள அனுமதிக்கக் கூடாது'
ADDED : ஆக 22, 2024 01:31 AM
'ஓடையில் மண் அள்ள
அனுமதிக்கக் கூடாது'
கோபி, ஆக. 22-
ஓடத்துறை ஏரிநீர் பாசன விவசாயிகள் சங்க தலைவர் வெங்கடாசலம், கோபி ஆர்.டி.ஓ., கண்ணப்பனிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது: ஓடத்துறை குளம், 400 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. கீழ்பவானி வாய்க்காலில், 36வது மைல் தொலைவில், சில இடங்களில் உள்ள மண் ஏரி, கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் எங்கள் குளத்துக்கு வரும் கசிவுநீரின் அளவு குறைந்துள்ளது. கன மழை பெய்தால் வரும் நீரால் மட்டுமே குளம் நிரம்புகிறது. ஓடை வழித்தடத்தில், பல இடங்களில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. கடுக்காம்பாளையத்தில் கசிவு நீர் அணை பாசனமும் உள்ளது. இதையெல்லாம் தாண்டி தான் ஓடத்துறை குளத்துக்கு தண்ணீர் வர வேண்டும்.
இந்நிலையில், செட்டியாம்பாளையம் குளம் துவக்கத்தில் இருந்து, ஓடத்துறை குளம் வரையுள்ள பகுதி ஓடையில் மண் அள்ள அனுமதி கொடுக்க கூடாது. கடுக்காம்பாளையம் கசிவு நீர் பாசன அணைக்கட்டுக்கு கீழ், வண்டல் மண் அனுமதி பெற்று அள்ளுவதாக தகவல் வந்துள்ளது. இதனால் அங்குள்ள ஓடை குழியாகிவிட்டது. எனவே ஓடையில் வண்டல் மண் அள்ளுவதை நிறுத்த வேண்டும். மேலும், ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்டவுள்ளதாக தெரிகிறது. அவ்வாறு கட்டினால், கடுக்காம்பாளையம் தடுப்பணை கசிவுநீர் பாசன விவசாயிகளும், ஓடத்துறை குளம் பாசன விவசாயிகளும் மிகவும் பாதிப்போம். எனவே புதிதாக தடுப்பணை கட்டுவதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.