ADDED : ஆக 16, 2024 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு, கணபதிபாளையம் நால்ரோடு பகுதியை சேர்ந்த பழனியப்பன் மகன் சுரேஷ், 35; திருமணமாகி மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கருத்து வேறுபாட்டால் மனைவி பிரிந்து விட்டார். இதனால் போதை பழக்கத்துக்கு சுரேஷ் ஆளானார்.
கடந்த, 7ம் தேதி காலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. கடந்த, 14ல் ஆரியங்காட்டு ரயில்வே நுழைவு பாலம் அருகே தனியார் தோட்டத்தில் சுரேஷ் உடல் கிடந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்த பழனியப்பன் அங்கு சென்றார். அவர் புகாரின்படி மலையம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

