/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டவுன் பஞ்.,ல் மயான வசதி; மனு தந்த துணை தலைவர்
/
டவுன் பஞ்.,ல் மயான வசதி; மனு தந்த துணை தலைவர்
ADDED : பிப் 25, 2025 04:42 AM
ஈரோடு: அரச்சலுார் டவுன் பஞ்., துணை தலைவரான ம.தி.மு.க.,வை சேர்ந்த துளசிமணி தலைமையிலான மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு வழங்கி கூறியதாவது:
மொடக்குறிச்சி தாலுகா, அரச்சலுார் டவுன் பஞ்., முதலாவது வார்டு பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்-றனர்.
இப்பகுதியில் இறந்தவர்களை அடக்க செய்ய போதிய மயான வசதியின்றி, சாலையோரங்களில் அடக்கம் செய்கிறோம்.இப்பகுதியில் பயன்பாடு இல்லாத மயான பூமியை, 1வது வார்டு அனைத்து சமுதாய மக்களுக்கு பயன்படுத்த அனுமதி வேண்டும். ம.தி.மு.க., கட்சியை சார்ந்துள்ளதால், தி.மு.க.,வினர் எனது வார்-டுக்கு பயன் கிடைக்கக்கூடாது என செயல்பட்டு வருகின்றனர். அதை மாற்றி மயான பூமியை ஒதுக்கீடு செய்து தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

