/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மயான ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்
/
மயான ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்
ADDED : ஆக 29, 2024 01:38 AM
மயான ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்
ஈரோடு, ஆக. 29-
ஈரோடு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், வருவாய் கோட்ட அளவிலான வேளாண் குறைதீர் கூட்டம் நடந்தது. ஆர்.டி.ஓ., சதீஸ்குமார் மனுக்களை பெற்றார். ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் அமுதா முன்னிலை வகித்தார்.
அவல்பூந்துறை பகுதியை சேர்ந்த, ராட்டைசுற்றிபாளையம் பகுதி மக்கள் மனு வழங்கி கூறியதாவது:
ராட்டை சுற்றிபாளையம் உட்பட சுற்று பகுதி கிராமங்களுக்கு பொது மயானம், பிற சமூகத்துக்கான மயானம் என தனித்தனியாக உள்ளது. அப்பகுதியை சேர்ந்த சிலர், மயானம் மற்றும் அனுமன் நதிக்கான குரங்கன் ஓடை இடத்தையும் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இதனால், அங்கு இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய முடியாமல், தகனம் செய்ய முடியாமல் பிரச்னை எழுகிறது.
இதுபற்றி, மொடக்குறிச்சி தாசில்தார், கலெக்டர் உட்பட பலரிடம் மனு வழங்கியும் நடவடிக்கை இல்லை. இருப்பினும், வருவாய் துறையினர் அளவீட்டில், அவ்விடங்கள் மயானம் மற்றும் குரங்கன் ஓடைக்கானது என்றும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதையும் உறுதி செய்துள்ளனர். இதுபற்றி விரைவான நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றித்தர வேண்டும்.
இவ்வாறு கூறினர்.
பின், 50க்கும் மேற்பட்டோர் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக மனு வழங்கினர்.