/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் விதிமீறல் பிளக்ஸ், பேனர் அகற்றப்படுமா?
/
ஈரோட்டில் விதிமீறல் பிளக்ஸ், பேனர் அகற்றப்படுமா?
ADDED : ஆக 27, 2024 02:51 AM
ஈரோடு: ஈரோடு மாநகரில் பிளக்ஸ் பேனர் மற்றும் விளம்பர தட்டிகள் அமைக்க, மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம், போலீஸ், நெடுஞ்சா-லைத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், மாநகரில் மக்கள் நெரிசல் மிகுந்த பகுதி மற்றும் முக்கிய ரோடு-களை ஆக்கிரமித்து, மீண்டும் நுாற்றுக்கணக்கான பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக பெருந்துறை ரோடு, மேட்டூர் ரோடு, ஜி.ஹெச் ரவுண்-டானா பகுதிகளில், வணிக நிறுவனங்களின் மீது வைக்கப்பட்-டுள்ள பேனர்கள், எந்நேரத்திலும் கழன்று விபத்து ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இதில்லாமல் ரோடுகளை மறித்து அமைக்கப்-படும் பிளக்ஸ் பேனர்களால், மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். இதில் பெரும்பாலானவை உரிய அனுமதி
பெறாதவை. விதி மீறி அமைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களை, மெத்தனம் காட்டாமல், மாநகராட்சி நிர்வாகம் அகற்ற, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.