/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மருதுறையில் குடிநீர் குழாய் திருட்டு
/
மருதுறையில் குடிநீர் குழாய் திருட்டு
ADDED : மார் 26, 2024 02:31 AM
காங்கேயம்;காங்கேயம் யூனியன் மருதுறை பஞ்., காளிவலசு கிராமத்தில், குடிநீர் குழாய்களை சேதப்படுத்தியும், திருடி சென்ற ஆசாமிகள் மீது, காங்கேயம் டி.எஸ்.பி., பார்த்தீபனிடம், பஞ்., தலைவர் செல்வி சிவகுமார் புகாரளித்துள்ளார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்டத்தில் தனிநபர் வீட்டுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி
தற்போது நடக்கிறது. இதில் குடிநீர் குழாய்களை சேதப்படுத்திய ஆசாமிகள், அவற்றில் பொருத்தப்பட்டிருந்த பித்தளை குழாய்களை திருடி சென்றுள்ளனர். இதனால்
காளிவலசு கிராமத்தில் இணைப்பு வழங்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நேரத்தில் களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த செயல் நடந்துள்ளது. இதில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

