/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அவிநாசி-அத்திக்கடவு திட்டத்தில் வந்த தண்ணீருக்கு வரவேற்பு
/
அவிநாசி-அத்திக்கடவு திட்டத்தில் வந்த தண்ணீருக்கு வரவேற்பு
அவிநாசி-அத்திக்கடவு திட்டத்தில் வந்த தண்ணீருக்கு வரவேற்பு
அவிநாசி-அத்திக்கடவு திட்டத்தில் வந்த தண்ணீருக்கு வரவேற்பு
ADDED : ஆக 18, 2024 02:50 AM
பெருந்துறை: அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சியில் நேற்று தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் மூலம் பெருந்துறை ஒன்றியம் துடுப்பதி பஞ்., சீரங்க கவுண்டன்பாளையம் குளத்துக்கு நேற்று தண்ணீர் வந்தது. தண்ணீரை அத்திக்கடவு குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்பக் கோரும் இயக்கம் மற்றும் அத்திக்கடவு-அவிநாசி திட்ட கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் துளுக்கப்பாளையம் பெரியசாமி, பத்திர எழுத்தர் முருகபூபதி, துடுப்பதி பஞ்., தலைவர் கவிதா அன்பரசு, பெருந்துறை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., துணை செயலாளர் அன்பரசு, சீனாபுரம் கார்த்திக், சிலேட்டர்புரம் காருண்யா வித்யா பவன் பள்ளி தாளாளர் பொன்னுசாமி உள்ளிட்ட விவசாயிகள் மற்றும் மக்கள் மலர் துாவி வரவேற்றனர்.