/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தி.மு.க., சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா
/
தி.மு.க., சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா
ADDED : ஜூன் 24, 2024 02:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு;முன்னாள் முதல்வரும், தி.மு.க., முன்னாள் தலைவருமான கருணாநிதியின் நுாற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, தெற்கு மாவட்ட இலக்கிய அணி சார்பில், செங்கோடம்பாளையத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
மாநகர செயலாளர் சுப்பிரமணியம் வழங்கினார். தெற்கு மாவட்ட பொருளாளர் பழனிசாமி, மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், கொள்கை பரப்பு இணை செயலாளர் சந்திரகுமார், இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளர் இளையகோபால் உள்பட பலர் பங்கேற்றனர்.