/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்த விற்பனை அதிகரிப்பு
/
ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்த விற்பனை அதிகரிப்பு
ADDED : பிப் 26, 2025 07:38 PM
ஈரோடு:ஈரோடு மாநகரில் பல்வேறு பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு வரை ஜவுளிச்சந்தை விற்பனை நடந்தது.
இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்ட ஜவுளி வியாபாரிகள், தயாரிப்பாளர், கடைக்காரர்கள் நேரடியாக கடைகள் அமைத்தும், சாலையோரம், வாகனங்களில் வைத்தும் விற்பனை செய்தனர்.
இதுபற்றி வியாபாரிகள் கூறியதாவது:
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து கடைக்காரர்கள், மொத்த ஜவுளி வியாபாரிகள் ஓரளவு வந்திருந்தனர். மார்ச், ஏப்., மாதங்களில் பள்ளி விடுமுறை, கோடை துவங்குவதாலும் ஜவுளி விற்பனை அதிகரிக்கும் என்பதால், மொத்தமாக ஆர்டர் வழங்கி உள்ளனர்.
நேற்று முன்தினம், 25 சதவீதம் வரை மொத்த விற்பனையும், 30 சதவீதம் வரை சில்லறை விற்பனையும் நடந்தது. மே 15க்கு பின் பள்ளி சீருடை விற்பனை துவங்கும் என்பதால், தற்போதே அதற்கான ஆர்டர் சேகரிக்கும் பணியிலும் கடைக்காரர்கள் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

