/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாலை வசதி மேம்படுத்துவேன்:அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி
/
சாலை வசதி மேம்படுத்துவேன்:அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி
சாலை வசதி மேம்படுத்துவேன்:அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி
சாலை வசதி மேம்படுத்துவேன்:அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி
ADDED : ஏப் 10, 2024 02:01 AM
ஈரோடு;ஈரோடு லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட சித்தோடு சுற்று வட்டார பகுதியில் ஈரோடு தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார், இரட்டை சிலை சின்னத்துக்கு நேற்று ஓட்டு சேகரித்தார்.
சித்தோடு பகுதி, நசியனுார், சிந்தன்குட்டை, வேட்டுவபாளையம், ஆட்டையாம்பாளையம், பேரோடு, சித்தோடு 4 ரோடு, வாய்க்கால் மேடு, தொட்டம்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் ஓட்டு கேட்டு அவர் பேசியதாவது:விவசாயம், விசைத்தறி உள்ளிட்ட ஜவுளி தொழில் நிறைந்த இப்பகுதியில், போதிய கட்டமைப்பு வசதி இல்லை. எதிர் கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, இப்பகுதியில், நான்கு வழிச்சாலை, மேம்பால வசதி, ஊராட்சிகோட்டை குடிநீர் விரிவாக்கம் செய்து தருவேன்.
மத்திய அரசின் நிதி பங்களிப்புடன், பல்வேறு தொழில் வளர்ச்சி, விவசாயம், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முயற்சி மேற்கொள்வேன். இப்பகுதியில் விசைத்தறிகளை நவீனமாக மேம்படுத்த, மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பேன்.
மினி டெக்ஸ்டைல் பார்க், ஜவுளித்துறை சார்ந்த பயிற்சிகளுக்கான வாய்ப்புகளை மத்திய அரசிடம் முயற்சித்து பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு பேசினார்.
மாநகர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் கே.வி.ராமலிங்கம், பகுதி செயலாளர்கள் கே.சி.பழனிசாமி, பி.சி.பழனிசாமி, தே.மு.தி.க., ஆனந்த் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

