/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
திருமணமான 7 நாளில் தீ விபத்தில் சிக்கிய பெண்
/
திருமணமான 7 நாளில் தீ விபத்தில் சிக்கிய பெண்
ADDED : பிப் 23, 2025 01:43 AM
திருமணமான 7 நாளில் தீ விபத்தில் சிக்கிய பெண்
ஈரோடு:மொடக்குறிச்சி, சின்னியம்பாளையம், குழலி கார்டனை சேர்ந்தவர் சரவணன், 23; இவர் மனைவி கவிப்பிரியா, 18; சமூக வலைதளம் மூலம் பழகி காதலித்த இருவரும், ஒரு வாரத்துக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.
சின்னியம்பாளையத்தில் ஆர்.எம்., பிரிக்சில் கூலி தொழிலாளியாக சரவணன் வேலை செய்கிறார். நேற்று முன் தினம் மதியம் கவிப்பிரியா, வீட்டுக்கு வெளியே சமையல் செய்ய மண்ணெண்ணெய் அடுப்பை பற்ற வைத்தபோது தீப்பிழம்பு வெளியானது. இதில் கவிப்பிரியா கை, கால், முகத்தில் தீக்காயம் பட்ட அலறினார். அக்கம்பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 55 சதவீத தீக்காயத்துடன் கவிப்பிரியா சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண் வியாபாரிகளை மார்க்கெட்டுக்குள் அடைத்து அட்டூழியம்தி.மு.க., நகர செயலாளர்,

