/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டூவீலரில் இருந்து விழுந்த வாலிபர் பலி
/
டூவீலரில் இருந்து விழுந்த வாலிபர் பலி
ADDED : ஆக 02, 2024 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, வெள்ளோடு, உலகபுரத்தை சேர்ந்தவர் மஞ்சுநாதன், 31, பாவு மில் பொது மேலாளர்.
ஈரோட்டில் இருந்து வெள்ளோட்டுக்கு சென்று ஹோண்டா சைன் பைக்கில் நேற்று மாலை சென்றார். டீசல் ஷெட்டை கடக்க முற்பட்டபோது சாலை தடுப்பில் மோதி விழுந்தார். தலையில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டு அதே இடத்தில் பலியானார். சூரம்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவருக்கு திருமணமாகி பிரியங்கா என்ற மனைவி உள்ளார். விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.