தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/'அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10 லட்சம் கடை மாயமாகும்'

'அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10 லட்சம் கடை மாயமாகும்'

'அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10 லட்சம் கடை மாயமாகும்'


ADDED : மார் 24, 2025 06:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2025 06:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புன்செய்புளியம்பட்டி: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், கொடியேற்று விழா மற்றும் வணிகர் சங்க பொதுக்கூட்டம், பவானிசாகரில் நடந்தது. வட்டார தலைவர் நாகமையன் தலைமை வகித்தார். செயலாளர் மூர்த்தி, பொருளாளர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா, வணிகர் சங்க கொடியேற்றி வைத்து பேசியதாவது: மே 5ம் தேதி மதுராந்தகத்தில் நடக்கவுள்ள வணிகர் சங்க மாநாட்டில் பல லட்சம் வணிகர்கள் பங்கேற்கின்றனர். முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர்களும் மாநாட்டில் பங்கேற்கின்றனர். ஆன்லைன் வர்த்தகத்தை நடத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களால், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 10 லட்சம் கடைகள் காணாமல் போக வாய்ப்புள்ளது. பவானிசாகரில் பொதுப்பணித்துறை இடத்தில் கடை நடத்தும் வணிகர்களுக்கு ஆண்டுக்கு, 10 சதவீத வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். சட்டமன்றம், பாராளுமன்றத்தில் வணிகர்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டும். இவ்வாறு பேசினார்.

கூட்டத்தில் கோவை மண்டல தலைவர் சந்திரசேகரன், மாநிலத் துணைத் தலைவர் திருமூர்த்தி, மாவட்ட தலைவர் சண்முகவேல் உள்ளிட்ட பல்வேறு வணிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us