ADDED : ஜூன் 01, 2026 04:01 AM
அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்:சத்தியமங்கலம்
போலீசார் பண்ணாரி பகுதியில் நேற்று மாலை ரோந்தில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பவானிசாகர் சாலையில் முட்புதரில் சூதாடிய கும்பலை சுற்றி
வளைத்தனர்.
புளியம்பட்டியை சேர்ந்த சரவணக்குமார், 35, கோவையை
சேர்ந்த கோபால், 49, விஜயகுமார், 44, சித்தாபுதுாரை சேர்ந்த
ஆறுமுகம், 50, காளிதாஸ்,45, கோவை என்.எஸ்.என்.பாளையம் மோகன்குமார், 58,
பி.என்.பாளையம் மவுன்ராஜ், 32, காந்திபுரம் ஜெகதீஷ், 50, சங்கனுார்
சதீஸ்குமார், 33, சிவானந்தபுரம் ஆனந்த்குமார், 43, என தெரிந்தது. 10
பேரையும் கைது செய்து, 1.52 லட்சம் ரூபாயைபறிமுதல் செய்தனர்.
