/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விசைத்தறி தொழிலாளருக்கு 10 சதவீத போனஸ்
/
விசைத்தறி தொழிலாளருக்கு 10 சதவீத போனஸ்
ADDED : அக் 13, 2025 02:08 AM
அவிநாசி:கோவை,
திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க
பொதுக்குழு கூட்டம், அவிநாசி அடுத்த தெக்கலுாரில், தலைவர்
பொன்னுச்சாமி தலைமையில் நடந்தது. செயலாளர் ஆறுமுகம், பொருளாளர்
குமாரசாமி முன்னிலை வகித்தனர். தொழிலாளருக்கு போனஸ் 10 சதவீதம்
கொடுப்பது, தார் ஓட்டும் நபருக்கு தறி ஒன்றுக்கு 300 ரூபாய் கொடுப்பது
என ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.
கடந்த ஏப்., 20ம் தேதி கோவை
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சு
வார்த்தையில் அறிவிக்கப்பட்ட 10 மற்றும் 15 சதவீதம் முழுமையான
கூலியை உறுப்பினர்கள் கேட்டு வாங்கியும், ஜவுளி
உற்பத்தியாளர்களிடம் தவறாமல் கூலி பில்லை வாங்க வேண்டும் எனவும்
தீர்மானிக்கப்பட்டது.
ஒப்பந்த கூலியை வழங்காத ஜவுளி
உற்பத்தியாளர்களின் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் பெயரை சங்கத்தில்
தெரிவிக்க முடிவு செய்யப்பட்டது.