ADDED : ஜூலை 01, 2026 05:28 AM
அ நிறம் | அளவு
பவானி:சித்தோடு
போலீசார், சித்தோடு செங்குந்தபுரம் பஸ் நிறுத்தம் அருகில் திடீர்
ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக நின்ற
செங்குந்தபுரம் நவீன் 19; சித்தோடு சந்தைகடை மேடு தனுஷ், 22,
ஆகியோரிடம், சோதனை செய்ததில், 100 போதை மாத்திரை இருந்தது. அவற்றை
பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.
* ஆப்பக்கூடல் அருகே
மாக்கல்புதுார் பகுதியில், சந்துக்கடையில் டாஸ்மாக் மது விற்ற,
பிரம்மதேசம், அட்டக்கல்லுாரை சேர்ந்த சவுந்தர்ராஜ், 35, என்பவரை,
ஆப்பக்கூடல் போலீசார் நேற்று கைது செய்து, 30 மது பாட்டில்களை
பறிமுதல் செய்தனர்.
