/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு பேரணி
/
100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு பேரணி
ADDED : மார் 28, 2024 07:09 AM
காங்கேயம் : காங்கேயத்தில், வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி அனைவரும் வாக்களிப்போம், நமது இலக்கு 100 சதவீத ஓட்டுப்பதிவு என்பதை வலியுறுத்தும் விதமாக, ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்துகொண்ட வாக்காளர் விழிப்புணர்வு பேரணி, காங்கேயம் பஸ்நிலைய பகுதியில் தொடங்கியது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணி முக்கிய வீதிகள் வழியாக வந்து தாலுகா அலுவலகத்தில் நிறைவடைந்தது. நமது இலக்கு, 100 சதவீத ஓட்டுப்பதிவு என்பதை வலியுறுத்தும் விதமாக, பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. காங்கேயம் தாசில்தார் மயில்சாமி, ஆர்.ஐ., விதுர்வேந்தன், கிராம நிர்வாக அலுவலர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்துகொண்டனர்.

