/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
1,000 வலி நிவாரணி மாத்திரை பறிமுதல்: வாலிபருக்கு காப்பு
/
1,000 வலி நிவாரணி மாத்திரை பறிமுதல்: வாலிபருக்கு காப்பு
1,000 வலி நிவாரணி மாத்திரை பறிமுதல்: வாலிபருக்கு காப்பு
1,000 வலி நிவாரணி மாத்திரை பறிமுதல்: வாலிபருக்கு காப்பு
ADDED : நவ 02, 2025 01:10 AM
ஈரோடு சித்தோடு அருகே, 1,000 வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்க வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம், சித்தோடு போலீசார் நேற்று மதியம் லட்சுமி நகர் ஜியோ பெட்ரோல் பங்க் பின்புறம் உள்ள, மாருதி கூரியர்ஸ் அருகே இருந்த காலி இடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும்படியாக நின்றிருந்த அந்தியூர் தவிட்டுபாளையம் நஞ்சப்பா வீதியை சேர்ந்த மூர்த்தி மகன் ஜீவானந்தம், 23, என்பவரை விசாரித்தனர்.
அவரிடம் சோதனை செய்த போது, 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, 1,000 வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றை போதைக்காக விற்க வைத்திருந்தது தெரியவந்தது.வலி நிவாரணி மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். ஜீவானந்தத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.