ADDED : ஏப் 28, 2025 07:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்றும் வழக்கம் போல் மழை பொழிவு இல்லை. ஆனால் வெயில் சுட்டெரித்தது. விடுமுறை தினம் என்பதால் மக்கள், வீடுகளை விட்டு வெளியே வர தயக்கம் காட்டினர்.
குறிப்பாக காலை, 10:30 மணிக்கு பிறகு, வீதிகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்தது. மாவட்டத்தில் நேற்று, 38.4 டிகிரி செல்சியஸ் (101 டிகிரி பாரன்ஹீட்) பதிவானது.