ADDED : ஏப் 20, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் நேற்றும் காலை, 7:00 மணி முதல் கடும் வெயில் வாட்டியது. வானத்தில் லேசான மேகமூட்டம் காணப்பட்டதால் வெளிச்சம் குறைவாக வெயில் தோன்றினாலும், வெக்கை அதிகமாக இருந்தது.
கடும் புழுக்கமான சூழல் நீடித்தது. காலை, 11:00 மணி முதல், 5:00 மணி வரை வெயில் குறைந்தபாடில்லை. கடந்த, 24 மணி நேர நிலவரப்படி, 101.2 டிகிரி வெயில் தென்பட்டது. பிற மாவட்டங்களை ஒப்பிடுகையில், 2.1 முதல், 4.2 டிகிரி வரை வெப்பம் கூடுதலாக தென்பட்டது.

