ADDED : ஏப் 16, 2025 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோட்டில்102 டிகிரிவெயில்
ஈரோடு:ஈரோட்டில் நேற்று முன்தினம் இரவில் பலத்த காற்றுடன் மழை பெய்த போதிலும், நேற்று காலை, 7:00 மணி முதல் கடும் வெயில் வாட்டியது. காலை, 11:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை வெயில் குறையவில்லை.
மாநில அளவில் ஈரோட்டில் நேற்று அதிகபட்சமாக, 102 டிகிரி வெயில் வாட்டியது. பிற மாவட்டங்களை ஒப்பிடுகையில், 2.1 முதல், 4 டிகிரி வரை வெயிலும், வெப்பமும் கூடுதலாக ஈரோடு மாவட்டத்தில் காணப்பட்டது.