/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மப்பில் வாகனம் ஓட்டிய 107 பேரின் உரிமம் ரத்து
/
மப்பில் வாகனம் ஓட்டிய 107 பேரின் உரிமம் ரத்து
ADDED : நவ 05, 2024 01:24 AM
மப்பில் வாகனம்
ஓட்டிய 107 பேரின்
உரிமம் ரத்து
ஈரோடு, நவ. 5-
ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார், கடந்த மாதம் மாநகரின் பல்வேறு பகுதிகளில், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் மது போதையில் வாகன இயக்கம் தொடர்பாக, 82 வழக்கு, சிக்னலை மீறியதாக, 15, டூவீலரில் ஹெல்மெட் அணியாததாக, 992, காரில் சீட் பெல்ட் அணியாததாக, 13௩ வழக்குகள் என, 1,727 வாகன ஓட்டிகள் மீது கடந்த மாதம் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக வாகன உரிமையாளர்களிடம், 3.௨௭ லட்சம் ரூபாய் வசூலித்தனர்.
இந்நிலையில் மதுபோதையில் வாகனம் இயக்கியவர்களின், ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு பரிந்துரைத்தனர். இதன்படி கடந்த மாதத்தில், 107 பேரின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

