ADDED : ஆக 27, 2026 03:14 AM

அ நிறம் | அளவு
கோபி: கோபி, பச்சைமலை முருகன் கோவில் வளாகத்தில் வீற்றி-ருக்கும், சிவகாமி அம்பாள் சமேத நடராஜர் சுவாமி சன்னதியில், ஆவணி மாத சதுர்த்தசி அபிேஷகம் மற்றும் 108 சங்காபிேஷக விழா நேற்று நடந்தது.
காலை 8:30 முதல், 11:00 மணி வரை நடராஜருக்கு மகா ேஹாமம் நடந்தது. ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, திராட்சை, மாதுளை என தலா, 10 கிலோ பழங்கள், திருமஞ்சனப்பொடி, மஞ்சள், அரிசிமாவு, சீகக்காய், சந்தனம் என தலா ஐந்து கிலோ, பன்னீர், 100 லிட்டர், இளநீர், 50, பால், 30, தயிர், 15 லிட்டர் கொண்டு, நடரா-ஜருக்கு அபிேஷகம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு, 108 சங்-காபிேஷகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
