ADDED : செப் 14, 2026 06:34 AM
அ நிறம் | அளவு
புன்செய்புளியம்பட்டி:விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, புன்செய்புளியம்பட்டி மற்றும் பவானிசாகர் ஒன்றிய பகுதிகளில், இந்து முன்னணி மற்றும் மக்கள் சார்பில், 108 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
மூன்றடி முதல் 16 அடி வரையிலான சிலை அமைக்கப்படவுள்ளது. சிலைகளுக்கு சிறப்பு பூஜை, ஆன்மிக நிகழ்ச்சி நடக்க உள்ளது. செப்.,18ம் தேதி அனைத்து சிலைகளும் டாணாபுதுாரிலிருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, பகுடுதுறை- பவானி ஆற்றில் கரைக்கப்படுகிறது. அன்றைய தினம் மாலையில் எஸ்.ஆர்.டி., நகர் அருகே பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
