ADDED : மார் 14, 2026 04:47 AM
அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம், வரதம்பாளையத்தை சேர்ந்த ஜோதிமணியின் மகன் கவுதம், 15; தனியார் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவன். ஸ்பிலெண்டர் பைக்கில் நண்பர்களை பார்த்து விட்டு பண்ணாரி சாலையில் வீட்டுக்கு, நேற்று முன்தினம் இரவு வந்து கொண்டி-ருந்தான்.
அப்போது சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி நோக்கி சென்ற சுற்றுலா பஸ், பைக் மீது மோதியது. இதில் கவுதம் சம்பவ இடத்தில் இறந்து விட்டான். சத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.
