ADDED : செப் 30, 2025 01:29 AM
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில், 11 தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு சமூக பாதுகாப்பு திட்டம் தியாகராஜ் - நம்பியூர் சமூக பாதுகாப்பு திட்டம்; இங்கு பணிபுரிந்த கார்த்திக், ஈரோடு சமூக பாதுகாப்பு திட்டத்துக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
அந்தியூர் கவியரசு கோபி; கோபி சரவணன் பவானி; பவானி வெங்கடேஸ்வரன் நம்பியூர்; நம்பியூர் கேசவமூர்த்தி கொடுமுடிக்கும் மாற்றப்பட்டுள்ளனர். கொடுமுடி பாலமுருகாயி, கொடுமுடி சமூக பாதுகாப்பு திட்டம்; இப்பதவியில் இருந்த ரவிசந்திரன், கோபி குடிமை பொருள் தனி தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளனர். கோபி குடிமை பொருள் (தனி) இளஞ்செழியன் அந்தியூர்; தாளவாடி ஜாகீர் உசேன், தாளவாடி சமூக பாதுகாப்பு திட்டம்; இப்பதவியில் இருந்த மாரிமுத்து, தாளவாடிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாற்றம் செய்யப்பட்டவர்கள் உடனடியாக புதிய பணியிடத்தில் சேர கலெக்டர் கந்தசாமி அறிவுறுத்தியுள்ளார்.