தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மாற்றுத்திறனாளிகள் 112 பேர் கைது

மாற்றுத்திறனாளிகள் 112 பேர் கைது

மாற்றுத்திறனாளிகள் 112 பேர் கைது


ADDED : பிப் 12, 2026 04:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 04:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் சாவித்ரி தலைமையில் மறி-யலில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு வருவாய் துறை மூலம், சாதாரண ஊனமுற்ற மாற்-றுத்திறனாளிகளுக்கு, 1,500 ரூபாய், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, 2,000 ரூபாய் உதவித்-தொகை வழங்குகிறது. விலைவாசி உயர்வு, வாழ்வாதாரத்தை கணக்கிட்டால் உதவித்தொகை போதுமானதல்ல. ஆந்திரா மாநி-லத்தில் சாதாரண ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, 6,000 ரூபாய், கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, 10,000 ரூபாய், படுத்த படுக்கையாக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, 15,000 ரூபாய் என உதவித்தொகை வழங்குகிறது.

புதுச்சேரியில் ஊனத்தின் தன்மைக்கு ஏற்ப, 5,800 ரூபாய், செலுங்கானாவில், 4,016 ரூபாய், டில்லியில், 5,000 ரூபாய் என பல மாநிலங்களில் உயர்த்தி வழங்கப்படுகிறது. தமிழக அரசும், உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் எனக்கூறி, பெருந்துறை சாலையில் மறியலில் ஈடுபட முயன்றபோது, 112 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us