தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோடு மாவட்டத்தில் 118 வேட்பாளர்கள் போட்டி

ஈரோடு மாவட்டத்தில் 118 வேட்பாளர்கள் போட்டி

ஈரோடு மாவட்டத்தில் 118 வேட்பாளர்கள் போட்டி


ADDED : ஏப் 10, 2026 03:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2026 03:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளில், 118 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கான சின்னத்துடன் நேற்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில், 202 வேட்பாளர்கள், 273 வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். நேற்று வேட்பு மனு பரிசீலனை, வாபஸ் பெறுதல் நடந்தது. இதை தொடர்ந்து தகுதியான மனு ஏற்கப்பட்டது. கூடுதல் மனுக்கள் தள்ளுபடியானது. தகுதி குறைபாட்டால் சில மனு நிராகரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, 118 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தொகுதி வாரியாக வேட்பாளர், கட்சி, சின்னம் ஆகியவற்றுடன் விபரம்:ஈரோடு கிழக்கு (20 பேர் போட்டி): 1.கோபிநாத் - காங்., - கை சின்னம். 2.ஆர்.மனோகரன் - அ.தி.மு.க., - இரட்டை இலை. 3.விஜய் பாலாஜி - த.வெ.க., - விசில். 4.தாண்டவமூர்த்தி - நா.த.க., - ஏர் சுமக்கும் உழவர். 5.பி.சித்ரா - பகுஜன் சமாஜ் கட்சி - யானை. 6.கமல்குமார் - விஸ்வ தமிழ் கழகம் - மோதிரம். 7.தண்டபாணி - வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி - உரலும் உலக்கையும். 8.தவசியப்பன் - தமிழக மக்கள் நலக்கட்சி - காஸ் சிலிண்டர். 9.ஏ.மணிகண்டன் - தமிழக வாழ்வுரிமை கட்சி - கேமரா. 10.கே.மணிகண்டன் - சாமானிய மக்கள் நலக்கட்சி - வாக்கிங் ஸ்டிக். சுயேட்சைகள்: 1.எம்.வி.கார்த்தி - க்யூப். 2.பி.சண்முகம் - தீப்பெட்டி. 3.தரணிகுமார் - செருப்பு. 4.சி.தியாகராஜன் - பிரஷர் குக்கர். 5.நதியா - வைரம். 6.முகம்மது கைபர் - ெஹல்மெட். 7.முத்துபாவா - பேனா முனையும் 7 கதிர்களும். 8.எம்.முருகேசன் - அலமாரி. 9.லட்சுமிநாதன் - பேட்ஸ்மேன். 10.ஆர்.வைரம் - பெட்டி.

ஈரோடு மேற்கு (13 பேர் போட்டி): 1.வே.பழனி - பகுஜன் சமாஜ் கட்சி - யானை. 2.சு.முத்துசாமி - தி.மு.க., - உதயசூரியன். 3.எம்.யுவராஜா - பா.ஜ., - தாமரை. 4.ஆனந்தமோகன் - த.வெ.க., - விசில். 5.விஜய் - நா.த.க., - ஏர் சுமக்கும் உழவர். 6.கலையரசன் - பார்ட்டி பார் தி ரைட்ஸ் ஆப் அதர் பேக்வேர்டு கிளாசஸ் - மடிக்கணினி. 7.வ.தனலட்சுமி - தமிழக வாழ்வுரிமை கட்சி - கேமரா. 8.எம்.நடராஜ் - விஸ்வ தமிழ் கழகம் - மோதிரம். 9.ம.ருக்மணி - சாமானிய மக்கள் நலக்கட்சி - வாக்கிங் ஸ்டிக். சுயேட்சைகள்:1.சண்முகம் - காஸ் சிலிண்டர். 2.மூர்த்தி - டிரக். 3.அ.ராமு - நீர்த்தொட்டி. 4.சி.ராஜேந்திரன் - கத்திரிக்கோல்.

மொடக்குறிச்சி (14 பேர் போட்டி): 1.எம்.அருண்குமார் - நா.த.க., - ஏர் சுமக்கும் உழவர். 2.எஸ்.கிருத்திகா - பா.ஜ., - தாமரை. 3.எஸ்.செந்தில்நாதன் - தி.மு.க., - உதயசூரியன். 4.கே.முனியப்பன் - பகுஜன் சமாஜ் கட்சி - யானை. 5.ஆர்.கார்த்திகேயன் - தமிழக வாழ்வுரிமை கட்சி - கேமரா. 6.டி.சண்முகன் - த.வெ.க., - விசில். 7.எம்.ரமேஷ் - நமது கொங்கு முன்னேற்ற கழகம் - காஸ் சிலிண்டர். 8.எம்.ரவிகுமார் - கனசங்கம் பார்ட்டி ஆப் இந்தியா - வெண்டைக்காய். சுயேட்சைகள்: 1.ஏ.கதிர்வேல் - டெலிவிஷன். 2.கே.தனபால் - பலுான். 3.ஏ.துரைசாமி - ரோடு ரோலர். 4.ஆர்.நடராஜன் - கத்திரி. 5.எல்.பாரதி- ெஹல்மெட். 6.ஆர்.வேலுசாமி - வைரம்.

பவானி (14 பேர் போட்டி): 1.கே.சி.கருப்பண்ணன் - அ.தி.மு.க., - இரட்டை இலை. 2.கே.ஏ.சந்திரசேகர் - தி.மு.க., - உதயசூரியன். 3.கே.சேகர் - பகுஜன் சமாஜ் கட்சி - யானை. 4.ஆர்.மோகனாதேவி - நா.த.க., - ஏர் சுமக்கும் உழவர். 5.பி.பராசக்தி - சாமானிய மக்கள் நலக்கட்சி - வாக்கிங் ஸ்டிக். 6.பி.கே.பழனிசாமி - தமிழக வாழ்வுரிமை கட்சி - கேமரா. 7.பாலகிருஷ்ணன் - த.வெ.க., - விசில். 8.ஆர்.விமல்ராஜ் - மக்கள் முன்னேற்ற கட்சி - தீப்பெட்டி. சுயேட்சைகள்: 1.பி.வி.ஆறுமுகம் - காஸ் சிலிண்டர். 2.எம்.கண்ணன் - சிசர்ஸ். 3.பி.கார்த்திகேயன் - டிரக். 4.எம்.பூபதி ராஜராஜசோழன் - எலக்ட்ரிக் போல். 5.வி.எம்.பெருமாள் - கரும்பலகை. 6.பி.மாணிக்கம் - சோபா.

பவானிசாகர் (12 பேர் போட்டி): 1.பி.எல்.சுந்தரம் - இந்திய கம்யூ., - கதிர் அரிவாள். 2.சவுந்தர்யா - நா.த.க., - ஏர் சுமக்கும் உழவர். 3.ஏ.பண்ணாரி - அ.தி.மு.க., - இரட்டை இலை. 4.பி.பழனிசுவாமி - பகுஜன் சமாஜ் கட்சி - யானை. 5.வி.பி.தமிழ்செல்வி - த.வெ.க., - விசில். 6.ராக்கி - அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் - தென்னந்தோப்பு. சுயேட்சைகள்:1.ஏ.அம்ரீஷ் - செஸ் போர்டு. 2.எம்.கோபாலன் - பலுான். 3.எஸ்.பழனிசுவாமி - ஸ்டெதஸ்கோப். 4.சி.பழனிசாமி - வைரம். 5.ராமகிருஷ்ணன் - மின் கம்பம். 6.டாக்டர் சி.ஹனுமையா - மோதிரம்.

கோபி (18 பேர் போட்டி): 1.மா.கி.சீதாலட்சுமி - நா.த.க., - ஏர் சுமக்கும் உழவர். 2.என்.நல்லசிவம் - தி.மு.க., - உதயசூரியன். 3.வி.பி.பிரபு - அ.தி.மு.க., - இரட்டை இலை. 4.ர.ரவிகுமார் - பகுஜன் சமாஜ் கட்சி - யானை. 5.கே.ஏ.செங்கோட்டையன் - த.வெ.க., - விசில். 6.மு.திருவெங்கடேஷ் - தமிழக வாழ்வுரிமை கட்சி - கேமரா. 7.மலர்விழி - ஓ.பி.சி.மக்கள் உரிமை கட்சி - மடிகணினி. சுயேட்சைகள்: 1.மு.ஆனந்தகுமார் - தீப்பெட்டி. 2.கு.சக்திவேல் - மின்கல விளக்கு. 3.ஜி.சண்முகம் - பிஸ்கெட். 4.ரா.சீதா - நகவெட்டி. 5.க.சுமதி - வாணலி. 6.ர.செல்வகுமார் - டயர்கள். 7.க.தனபால் - பலாப்பழம். 8.பழனிசாமிராஜ் - ரப்பர்முத்திரை. 9.ஏ.புவனேஸ்வரி - தேனீர் வடிகட்டி. 10.பா.ரமேஷ் - விரலி. 11.வெங்கடாசலம் - இரட்டை தொலை நோக்காடி.

அந்தியூர் (14 பேர் போட்டி): 1.ஹரி பாஸ்கர்- அ.தி.மு.க.,- இரட்டை இலை. 2. சிவபாலன்-தி.மு.க., - உதயசூரியன். 3.விஜய் வெங்கடேஷ்-த.வெ.க.,-விசில். 4.ஆனந்தி-நா.த.க.,- ஏர் சுமக்கும் உழவர். 5. கவிபாரதி-பகுஜன் சமாஜ்-யானை. 6.ராமசாமி-சாமானிய மக்கள் நலக்கட்சி-வாளி. 7.ஈஸ்வரமூர்த்தி-த.வா.க.,-கேமரா. 8.கோபால்- அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம்-வாயு சிலிண்டர். சுயேட்சைகள்: 1.கார்த்தி-சிரிஞ்சு. 2.சங்கர்குமார்-பிரஷர் குக்கர். 3.செல்வி-அலமாரி. 4.தனபால்-பட்டாணி. 5.வீரன்-வைரம். 6.ஷேக் தாவூத்-மணியாரம்.

பெருந்துறை (13 பேர் போட்டி): 1.ஈஸ்வரன்-பகுஜன் சமாஜ் கட்சி-யானை. 2.சி.லோகநாதன்-நாம் தமிழர் கட்சி-ஏர் சுமக்கும் உழவர். 2.தோப்பு என்.டி. வெங்கடாச்சலம்-தி.மு.க.,- உதய சூரியன். 3.எஸ்.ஜெயகுமார்-அ.தி.மு.க.,-இரட்டை இலை. 4.வி.பி. அருணாசலம்-த.வெ.க.,- விசில். 5.சி.சந்தோஷ் கிருஷ்ணன்-த.வா.க.,- புகைப்பட கருவி. 6.ப.வளர்மதி-சாமானிய மக்கள் நலக்கட்சி-ஊன்றுகோல். சுயேட்சைகள்: 1.எஸ். சந்தோஷ்-கண்காணிப்பு காமிரா. 2.மா. செல்வராசு-வாயு சிலிண்டர். 4.எம்.பழனிசாமி-வாயு அடுப்பு. 5.சி.வெங்கடாசலம்-தேனீர் வடிகட்டி. 6.அ.ஜார்ஜ் ஸ்டீபன்-திராட்சை. 7.கே.ஜெயப்பிரகாஷ்-வைரம்.

ஒரு பேலட் யூனிட்டில், 1 நோட்டோ தவிர, 15 வேட்பாளர் விபரம் இணைக்கலாம். 16க்கு மேல் வேட்பாளர் இருந்தால், 2 பேலட் யூனிட் தேவைப்படும். தற்போதைய நிலையில் ஈரோடு கிழக்கு மற்றும் கோபியில் மட்டும் இரு பேலட் யூனிட் பயன்படுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us