ADDED : பிப் 04, 2025 05:48 AM
இடைத்தேர்தலில் நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. வாக்காளர் அடையாள அட்டை இல்லாத நிலையில், 12 வகை பிற ஆவ-ணங்கள் பயன்படுத்தி ஓட்டுப்பதிவு செய்யலாம்.ஆதார் அட்டை, 100 நாள் வேலை திட்ட பணி அட்டை, புகைப்-படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சல் கணக்கு புத்தகம், தொழிலாளர் நல அமைச்சக திட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை, டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரின் ஸ்மார்ட் அட்டை, பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூ-திய ஆவணம், மத்திய - மாநில - பொதுத்துறை
நிறுவனத்தின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, எம்.பி., - எம்.எல்.ஏ., - மேலவை உறுப்பினர்
அலுவலக அடையாள அட்டை, மத்திய அரசின் சமஜூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் வழங்கிய
தனித்துவ அடையாள அட்டையை பயன்படுத்தி ஓட்டளிக்கலாம்.
'மக்களின் சிறு கோரிக்கைகள்தேர்தலுக்கு பின் நிறைவேறும்' வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, ஈரோட்டில் நேற்று கூறியதாவது: தி.மு.க., வேட்பாளர்
சந்திரகுமாருக்கு ஓட்டு சேக-ரித்து, பிரசாரத்தை நிறைவு செய்துள்ளோம். முதல்வர் கொண்டு வந்த திட்டங்களை,
மக்கள் நினைவுபடுத்தி வாக்களிப்பதாக கூறினர். மாநகரின், 33 வார்டில், 140 கி.மீ., துாரம் நடந்தே சென்று ஓட்டு சேகரித்ததால், மக்கள் பிரச்னைகளையும்
அறிந்தோம். மக்களின் சிறு, சிறு பிரச்னைகளைக்கூட கவனத்தில் எடுத்துள்ளோம். தேர்த-லுக்கு பின் அதற்கான
தீர்வுகளை ஏற்படுத்துவோம். இவ்வாறு கூறினார்.

