/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
1.3 டன் ரேஷன் அரிசி ஈரோட்டில் பறிமுதல்
/
1.3 டன் ரேஷன் அரிசி ஈரோட்டில் பறிமுதல்
ADDED : டிச 23, 2024 09:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் சுதா, எஸ்.ஐ., மேனகா ஆகியோர், ஈரோடு திருநகர் காலனியில் நேற்று வாகன தணிக்கை செய்தனர்.
அப்போது வந்த ஒரு மாருதி ஆம்னி வேனில், 1,300 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. வேனை ஓட்டி வந்த ஈரோடு, கருங்கல்பாளையம் நாகராஜ், 30, என்பவரை கைது செய்தனர். வேன், ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.