தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 8 தொகுதிகளில் 131 மனுக்கள் ஏற்பு

8 தொகுதிகளில் 131 மனுக்கள் ஏற்பு

8 தொகுதிகளில் 131 மனுக்கள் ஏற்பு


ADDED : ஏப் 08, 2026 06:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2026 06:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு :ஈரோடு மாவட்டத்தில் நேற்று நடந்த வேட்பு மனு பரிசீலனையில், 71 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 131 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

ஈரோடு மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதியில், 202 வேட்பாளர்கள், 273 வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். மனுக்கள் பரிசீலனை நேற்று நடந்தது. அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர், தேர்தல் பொது பார்வையாளர், சில தொகுதிகளில் தேர்தல் செலவு பார்வையாளர்கள் முன்னிலையில் பரிசீலனை நடந்தது. வேட்பாளர்கள், அவர்களது முதன்மை முகவர்கள் பங்கேற்றனர். இறுதியாக, 71 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 131 வேட்பாளர்கள் மனுக்கள் ஏற்கப்பட்டன.ஒரே வேட்பாளர், ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்த நிலையில், அவர்களது ஒரு மனுவை ஏற்று, பிற மனுக்களை தள்ளுபடி செய்தனர்.

தற்போது ஏற்கப்பட்ட தகுதியான வேட்பாளர்கள், மாற்று வேட்பாளர்கள், நாளை (9) காலை, 11:00 முதல் மதியம், 3:00 மணி வரை மனுக்களை வாபஸ் பெறலாம். மதியம், 3:00 மணிக்கு சின்னத்துடன் கூடிய இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us