ADDED : ஆக 22, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானிசாகர், பவானிசாகரை அடுத்த பெரிய கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் தேவராஜ், 55; ஆடு வளர்த்து வருகிறார். கடந்த, 17ம் தேதி நள்ளிரவில் வீட்டு முன்பு கட்டியிருந்த இரு ஆடுகளை, மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர்.
இதேபோல் அதே ஊரைச் சேர்ந்த கருப்பன், 80; வீட்டு முன் கட்டியிருந்த எட்டு ஆடுகள், ரங்கன், 88, வளர்த்து வந்த நான்கு ஆடுகளையும் திருடி சென்றுள்ளனர். ஒரே இரவில், 14 ஆடுகள் திருடப்பட்ட சம்பவம், மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. பவானிசாகர் போலீசார், களவாணிகளை தேடி வருகின்றனர்.