/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் முதுகலை ஆசிரியர்களுக்கான மீளாய்வு கூட்டத்தில் 140 பேர் பங்கேற்பு

ADDED : அக் 16, 2025 01:37 AM
ஈரோடு, ஈரோட்டில், முதுகலை ஆசிரியர்களுக்கான மீளாய்வு கூட்டம் நேற்று துவங்கியது.
முதன்மை கல்வி அலுவலர் சுப்பாராவ் பேசினார். அரசு, அரசு நிதியுதவி பள்ளிகளை சேர்ந்த முதுகலை ஆசிரியர்கள், 140 பேர் நேற்று காலை கூட்டத்தில் பங்கேற்றனர். கடந்தாண்டு நடந்த பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பொது தேர்வு முடிவுகள், தற்போது நடந்து முடிந்த காலாண்டு தேர்வு முடிவுகளை அடிப்படையாக கொண்டு கூட்டம் நடத்தப்பட்டது.
காலை 9:30 முதல் மதியம் 12:30 மணி வரை ஆங்கில ஆசிரியர்களுக்கான கூட்டம் நடந்தது. மாலை 2:00 முதல் 5:00 மணி வரை இயற்பியல் ஆசிரியர்களுக்கான கூட்டம் நடந்தது. இன்று காலை வணிகவியல், கணக்கு பதிவியல் பாடத்துக்கும், மாலையில் தமிழ் ஆசிரியர்களுக்கான கூட்டம் நடக்கிறது.
22 காலை கணிதம், வணிக கணிதம், புள்ளியியலுக்கும், மாலையில் வேதியியல் பாடத்துக்கும் கூட்டம் நடக்கிறது. 23 காலை பொருளியல் பாடத்துக்கும், மாலையில் வரலாறு, உயிரியல், தாவரவியல், விலங்கியல் பாட ஆசிரியர்களுக்கு கூட்டம் நடக்கிறது. 24ல் கணினி அறிவியல், கணினி பயன்பாடு பாட ஆசிரியர்களுக்கும், மாலையில் தொழிற்கல்வி ஆசிரியர்களும் கூட்டம் நடக்கிறது.