ADDED : ஏப் 03, 2026 03:48 AM
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளில், நேற்று முன்தினம் வரை, 1.36 கோடி ரூபாயை தேர்தலுக்கான பறக்கும் படையினர், நிலை கண்காணிப்புக்குழுவினர் பறிமுதல் செய்திருந்தனர். அந்தியூரில் நேற்று ஒருவரிடம், 6 லட்சத்து, 79,500 ரூபாயை பறிமுதல் செய்தனர். இத்துடன் சேர்த்து, 1 கோடியே, 43லட்சத்து, 46,710 ரூபாயானது. உரிய ஆவணங்களை வழங்கியதால், 1 கோடியே, 33 லட்சத்து, 98,210 ரூபாயை உரியவர்களிடம் திரும்ப
ஒப்படைத்தனர்.
* அந்தியூர் அருகே தண்ணீர்பந்தல்பாளையம் பிரிவில், ஜெயராஜ் தலைமையிலான தேர்தல் பறக்கும்படையினர் நேற்று முன்தினம் இரவு சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
கர்நாடக மாநிலத்திலிருந்து ஜீப்பில் வந்த கர்நாடகா, சென்னப்பட்டினத்தை சேர்ந்த நாகேஷிடம், 4.29 லட்சம் ரூபாய் இருந்தது. கருங்கல்பாளையத்துக்கு சந்தைக்கு மாடு வாங்க செல்வதாக கூறினார். ஆனால் உரிய ஆவணம் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்து. தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் இளஞ்செழியனிடம் ஒப்படைத்தனர்.
