/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிளாஸ்டிக் பொருள் தயாரிப்பு குடோனில் 1,440 கிலோ பறிமுதல்
/
பிளாஸ்டிக் பொருள் தயாரிப்பு குடோனில் 1,440 கிலோ பறிமுதல்
பிளாஸ்டிக் பொருள் தயாரிப்பு குடோனில் 1,440 கிலோ பறிமுதல்
பிளாஸ்டிக் பொருள் தயாரிப்பு குடோனில் 1,440 கிலோ பறிமுதல்
ADDED : ஜூலை 12, 2025 01:10 AM
ஈரோடு, ஈரோடு ஆர்.என்.புதுாரை அடுத்த சி.எம்.நகரில், கார்த்திக் என்பவருக்கு சொந்தமான குடோன் செயல்பட்டு வருகிறது. இங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் தயாரிப்பதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் தீனதயாளன் முன்னிலையில், மாாநகராட்சி சுகாதார அலுவலர் தங்கராஜ், சுகாதார ஆய்வாளர்கள் கண்ணன், சதீஸ் குடோனில் ஆய்வு செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட பாலித்தீன் பொருட்கள் தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம், 1,440 கிலோ பாலித்தீன் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியது: ஒரு மாதமாக பெயர் பலகையின்றி குடோன் செயல்பட்டுள்ளது. பறிமுதல் செய்த பொருட்களின் மதிப்பு, 2.௧௬ லட்சம் ரூபாய். குடோன் உரிமையாளர் கார்த்திக்குக்கு, 25,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளோம். குடோன் மீதான தொடர் நடவடிக்கைகளை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் செய்வார்கள். இவ்வாறு கூறினர்.
இதேபோல் மாநகராட்சி பகுதி கடைகளில், பிளாஸ்டிக் கவர் விற்பனை குறித்து மாநகராட்சி அதிகாரிகள் தினசரி ஆய்வு நடத்துகின்றனர். நேற்று நான்கு மண்டலங்களில் நடந்த ஆய்வில் தலா, ௨௫ கடைகள் என, ௧௦௦ கடைகளுக்கு, 20,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.