ADDED : அக் 18, 2026 06:34 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:இந்திய
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் பதவி விலக கோரி, இந்திய ஜனநாயக
வாலிபர் சங்கத்தினர், ஈரோடு ரயில்வே ஸ்டேஷனை முற்றுகையிட நேற்று
முன்தினம் ஊர்வலமாக சென்றனர்.
அனைவரையும் போலீசார் தடுத்து நிறுத்தி
கைது செய்து மாலையில் விடுவித்தனர். இந்நிலையில் ரயில் மறியலில்
ஈடுபட முயன்றதாக, சங்கத்தின் மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் உள்பட,
15 பேர் மீது சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
