/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
15ல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
/
15ல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
ADDED : மார் 13, 2024 01:59 AM
ஈரோடு:ஈரோடு
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில்
ஒவ்வொரு மாதமும், 3ம் வெள்ளி கிழமை தனியார் வேலைவாய்ப்பு முகாம்,
பல்வேறு தனியார் துறை வேலையளிப்பவர்கள் கொண்டு நடத்தப்படுகிறது.
எழுத,
படிக்க தெரிந்தவர்கள் முதல், பட்டப்படிப்பு படித்தவர்கள்,
செவிலியர்கள், டெய்லர், கணினி இயக்குபவர், தட்டச்சர், ஓட்டுனர்கள்
போன்ற பணிகளுக்கு தகுதியானவர்கள் பங்கேற்கலாம்.
இதன்படி
வரும், 15ம் தேதி காலை, 10:00 மணிக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலகத்தில் நடக்கிறது. வேலை பெற வருபவர்கள், வேலைவாய்ப்பு
அளிப்போர் இலவசமாக பங்கேற்கலாம். கூடுதல் விபரத்துக்கு, 86754
12356, 94990 55942 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.

