ADDED : மே 30, 2026 04:59 AM

வெள்ளகோவில்:திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில், சிவன்நாதபுரம் மேற்கு தோட்டம் பகுதியை சேர்ந்த குணசேகரன், 52, விவசாயி. இவர் தனது தோட்டத்தில், 80 செம்மறியாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு, நேற்று காலை பார்ப்பதற்காக சென்றபோது தெரு நாய்கள் கடித்து, 11 செம்மறி ஆடுகள் இறந்தும், 4 ஆடுகள் படுகாயத்துடனும் இருந்தன. 1 ஆடு காணாமல் போனதும் தெரியவந்தது, இது குறித்து வருவாய்த்துறைனர் விசாரணை நடத்தினர்.
கால்நடை மருத்துவர் இறந்த ஆடுகளை பிரேத பரிசோதனை செய்து, காயமான ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தார், இருப்பினும் ஆடுகள் இறந்தன. இறந்த ஆடுகளுக்கு சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இழப்பீடு பெற விவசாயிகளை அலைக்கழிப்பு செய்யக்கூடாது. நிலுவையில் உள்ள இழப்பீடு தொகையை உடனே விவசாயிகள் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என, விவசாயிகள் தெரிவித்தனர்.
