/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இலவச வீட்டுமனை கோரி 1,500 மனுக்கள் வழங்கல்
/
இலவச வீட்டுமனை கோரி 1,500 மனுக்கள் வழங்கல்
ADDED : ஜூன் 24, 2025 01:19 AM
ஈரோடு, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலர் மாரிமுத்து தலைமையில், ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் உட்பட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் சேகரிக்கப்பட்ட, 1,500 மனுக்களை, ஈரோடு டி.ஆர்.ஓ., சாந்தகுமாரிடம் நேற்று சமர்ப்பித்தனர்.
மாநகர பகுதியில் வாடகை வீடுகளில் வசிப்போர், நிலம், வீடில்லாதோர் என, 1,500 சிறுபான்மையின, முஸ்லிம், கிறிஸ்தவ மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். அவ்வாறான, 1,500 பேரிடம் இருந்து மனுவாக சேகரித்து வழங்கப்பட்டுள்ளது. மனுக்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரித்து, இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். பல்வேறு அமைப்புகளை சேர்ந்த கனகராஜ், அர்ஷத் உட்பட பலர் பங்கேற்றனர்.

