/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அமைப்பு சாரா நலவாரியத்தில் 155 இலங்கை தமிழர்கள் பதிவு
/
அமைப்பு சாரா நலவாரியத்தில் 155 இலங்கை தமிழர்கள் பதிவு
அமைப்பு சாரா நலவாரியத்தில் 155 இலங்கை தமிழர்கள் பதிவு
அமைப்பு சாரா நலவாரியத்தில் 155 இலங்கை தமிழர்கள் பதிவு
ADDED : டிச 25, 2025 04:54 AM
ஈரோடு: ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகம் சார்பில், ஈஞ்சம்பள்ளி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்களை, அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியங்களில் உறுப்பினராக இணைக்க சிறப்பு பதிவு முகாம் நடந்தது.
அலுவலக கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், உதவி ஆய்வர் ராஜ்குமார், வருவாய் ஆய்வர் ராமசந்திரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இலங்கை தமிழர்கள், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.அவர்களுக்கு நலத்திட்டம் மூலம் வழங்கப்படும் உதவிகள் குறித்து விளக்கப்பட்டது. அவர்களது ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், பதிவு பணிச்சான்று போன்றவை சரி பார்க்கப்பட்டு, 155 பேர் புதிய உறுப்பினர்களாக பதிவு செய்யப்பட்டனர்.
கூடுதல் விபரத்துக்கு, ஈரோடு, சென்னிமலை சாலை, அரசு ஐ.டி.ஐ., பின்புறம் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் அலுவல-கத்தில் நேரில் அல்லது, 0424 2275591, 2275592 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவித்தனர்.

